Skin Care Tips in Tamil

முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!
சமீப காலமாக மக்கள் தங்கள் அழகை மெருகேற்றுவதற்கு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, காலங்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அழகைக் கெடுக்கும் வகையில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நம் வீட்டு சமையலறையிலேயே நிவாரணிகள் உள்ளன.


அதில் ஒன்று தான் எலுமிச்சை. இதில் உள்ள வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் இதர உட்பொருட்கள் சரும பிரச்சனைகளை விரைவில் போக்கும். முக்கியமாக எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமைகளைப் போக்க வல்லது. ஆகவே உங்கள் முகம், கை, கால் போன்றவற்றில் கருமை அதிகம் இருந்தால், எளிதில் கிடைக்கும் எலுமிச்சையைக் கொண்டு நீக்குங்கள். இக்கட்டுரையில் சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை மேற்கொள்ளும் முன், அதை கையின் சிறு பகுதியில் தடவி ஊற வைத்து, பின் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் இருந்தால் மேற்கொள்ளுங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட்டை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
* பின் அதை கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
* இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள கருமை முற்றிலும் போய்விடும்.

எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள்

* 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின் அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
* இந்த கலவையை வாரத்திற்கு 2 முறை சருமத்தில் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.






No comments:

Powered by Blogger.