Makeup Tips in Tamil

ஃபிரண்ட் கல்யாணத்துக்கு போறீங்களா? உங்களுக்கான சூப்பர் மெகந்தி டிசைன்






மெகந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! இதனை விரும்பாத பெண்களே கிடையாது என்று கூறலாம். ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான மெகந்தி டிசைன்களை போடுவது என்பது நாளடைவில் நமக்கே சளித்து விடும். புதுப்புது டிசைகளை போட்டால் தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். நமது கற்பனை திறனும் மேலும் மேலும் வளரும். இந்த பகுதியில் உங்களது கண்களை கவரும் அழகான மெகந்தி டிசைகள் கொடுக்கப்பட்டுள்ளன.1. இந்திய மெகந்தி டிசைன்


1. இந்திய மெகந்தி டிசைன்

இந்த இந்தியன் மெகந்தி டிசைனில் மிக அழகான பூக்கள் நிறைந்துள்ளன. மயில் டிசைன்கள் எல்லாம் விரல்களுக்கு கூட வருகின்றன. இதற்கு இடையில் இடைவெளிகளையே நீங்கள் பார்க்க முடியாது. இது உங்களது கரங்களை முழுமையாக காட்டும். உங்களது கைகளுக்கு அழகான தோற்றத்தைகொடுக்கும்.
2. அரபிக் டிசைன்

2. அரபிக் டிசைன்

அரபிக் மெகந்தி டிசைன் என்றாலே பலரும் இதனை வேண்டுவார்கள். இது மிகவும் அழகான கோடுகளால் ஆனது. இது சிம்பிள் ஆன டிசைனாகவும் தெரியும். இதில் பூக்கள், இலைகள், கோடுகள் ஆகியவை உள்ளன.



4. இன்டோ அரபிக் டிசைன்

3. இன்டோ அரபிக் டிசைன்

இன்டோ அரபிக் மெகந்தி டிசைன் ஒரு அழகான டிசைன் ஆகும். பொறாமைப்படும் அளவிற்கு அழகை தருவதில் இந்த டிசைன்க்கு ஒரு தனி இடம் உண்டு.



5. டைமண்ட் டிசைன்

4. டைமண்ட் டிசைன்

இந்த டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், உங்களை அழகாக காட்டுவதாகவும் இருக்கும் இதில் சிறிய மற்றும் பெரிய அளவினாலான செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் உள்ளன. இது புதுமை வாய்ந்ததாகவும் உள்ளது.



7. திருமண டிசைன்

5. திருமண டிசைன்

திருமண மெகந்தி டிசைனில் அழகான பூக்கள், சின்ன சின்ன கோடுகளால் அழங்கரிப்பது பல அம்சங்கள் அடங்கும். இது கீழ் இருந்து மேல் வரை மிகவும் அழகாக காட்டும். இது மிகவும் ஆடம்பரமான டிசைன் ஆகும்.



8. கிராஸ் டிசைன்

6. கிராஸ் டிசைன்

கிராஸ் டிசைன் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இதில் உள்ள கோணங்கள் உங்களது கரங்களை அழங்கரித்து காட்டும்.



9. பூக்கள் டிசைன்

7. பூக்கள் டிசைன்

இப்படி கூட போடலாமா என்று காட்டுகிறது இந்த பூக்களால் அழங்கரிக்கப்பட்ட மெகந்தி டிசைன். இது மிகவு ஸ்டைலான ஒரு டிசைன் ஆகும். இதனை நீங்கள் கரங்களில் போட்டால் அனைவரது கண்களும் உங்கள் மீது தான் இருக்கும்.



10. ராஜஸ்தானி மெகந்தி

8. ராஜஸ்தானி மெகந்தி

ராஜஸ்தானி மெகந்தி டிசைனில் அழகான சின்ன சின்ன பூக்கள் உள்ளன. இதில் மயில்கள், வளைவு நெழிவுகள் பல உள்ளன. இதனை கரங்களில் போட்டால் ஒரு சின்ன இடம் கூட உங்களது கைகளில் மெகந்தி இல்லாமல் இருக்காது.

No comments:

Powered by Blogger.